பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு

பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு
Published on

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 25-ந் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com