ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி பதவிகாலம் நீட்டிப்பு

ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரியின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் ஆணைய தலைமை செயல் அதிகாரி பதவிகாலம் நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

ஆதார் எண்ணை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை செயல் அதிகாரியாக அமித் அகர்வால் உள்ளார். அவருக்கு அடுத்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி வரை மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் அகர்வால், 1993-ம் ஆண்டு பிரிவு சத்தீஷ்கார் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com