தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோலார் அருகே தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தொழிலாளியிடம் ரூ.2 லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

கோலார் தங்கவயல்;

கோலார் மாவட்டம் தங்கவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. தொழிலாளி. இவர் நேற்று வேலை விஷயமாக தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் கோலார் நகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோலார் தங்கவயலுக்கு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மர்மநபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து ராஜூவை வழிமறித்தனர். இதையடுத்து அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராஜூவிடம் இருந்த ரூ.2 லட்சத்தை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிசென்றனர். இதுகுறித்து ராஜூ உடனடியாக கோலார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com