பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று மிண்டோ அரசு ஆஸ்பத்திரி தகவல் தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்?
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் மிண்டோ கண் ஆஸ்பத்திரி இயக்குனர் சுஜாதா ராதோட் பெஙகளூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். அந்த நேரத்தில் கண்ணில் தீக்காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பொதுவாக அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்களில் 40 சதவீதம் பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

அதனால் பட்டாசு வெடித்து கண்ணில் காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நாங்கள் எங்கள் ஆஸ்பத்திரியில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வார்டு அமைத்துள்ளோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். சிகிச்சை அளிக்க 100 டாக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால் முதலில் சுத்தமான துணியை நீரில் நனைத்து கண்களை துடைக்க வேண்டும். அதன் பிறகு கண்கள் மீது பருத்தி துணியை வைத்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டும்.

பட்டாசு வெடித்து கண்களில் காயம் அடைகிறவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் 9481740137, 9480832430 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு சுஜாதா ராதோட் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com