கேரளாவில் முகக் கவசம் கட்டாயம்: முதல்-மந்திரி பினராயி விஜயன்


கேரளாவில் முகக் கவசம்  கட்டாயம்: முதல்-மந்திரி  பினராயி விஜயன்
x

கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் . சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள், முன்களப் பணியாளர்களும் மாஸ்க் அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1 More update

Next Story