ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை வாங்கிய பேஸ்புக்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை பேஸ்புக் நிறுவனம் சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு (5.7 பில்லியன் டாலர்) விலைக்கு வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை வாங்கிய பேஸ்புக்
Published on

புதுடெல்லி

2016 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஜியே செல்பேசி நிறுவனம் இந்தியாவிலேயே நம்பர் ஒன் செல்பேசி நிறுவனமாக திகழ்கிறது. அந்நிறுவன பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த பேஸ்புக் நிறுவனம் வாங்குவது குறித்து பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், ஜியே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேஸ்புக் நிறுவனம் தங்களது நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை இந்திய மதிப்பில் சுமார் 44 ஆயிரம் கேடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜியே நிறுவனத்தின் அங்கமான ஜியே மார்ட் நிறுவனத்துக்கும் வாட்ஸ் அப் தளத்துக்கும் தெடர்பை ஏற்படுத்தி செயல்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com