கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது


கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 March 2025 11:58 PM IST (Updated: 11 March 2025 12:01 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் மையத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கொச்சி,

கேரள போலீசாருக்கு பெரும்பாவூரில் உள்ள ஒரு கடையில் போலியான ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாவூரின் தனியர் பேருந்து நிலையம் அருகே ஒரு ஷாப்பிங் வளாகத்தின் தரை தளத்தில் உள்ள மொபைல் போன் கடைக்குள் இந்த பிரிவு செயல் பட்டு வந்தது தெரியவந்த்து.

இந்த மொபைல் கடையை முற்றுகையிட்ட போலீசார் சோதனையின் போது பல போலி ஆதார் அட்டைகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த போலி நிறுவனத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story