போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல்; 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

டிஜிட்டல் உபகரணங்கள், ஆவணங்கள் மற்றும் வங்காளதேச கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
என்.ஐ.ஏ. சோதனை
Published on: 

புதுடெல்லி

போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியுள்ளது.

போலி இந்திய கரன்சி நோட்டுகள் பறிமுதல் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இதன்படி, பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள எட்டு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

போலி கரன்சி நோட்டுகள்

இதில், பீகாரின் கயா நகரில் 3 இடங்களிலும், அவுரங்காபாத்தில் 2 இடங்களிலும், ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் 2 இடங்களிலும், மேற்கு வங்காளத்தின் மால்டா நகரில் ஓரிடத்திலும் சோதனை நடந்தது.

பீகாரின் அவுரங்காபாத் நகரில் மதன்பூர் காவல் நிலையத்தில் ரூ.2.48 லட்சம் மதிப்பிலான போலி கரன்சி நோட்டுகள் பறிமுதலை தொடர்ந்தே இந்த சோதனை நடந்துள்ளது. இதில் டிஜிட்டல் உபகரணங்கள், ஆவணங்கள் மற்றும் வங்காளதேச கரன்சி நோட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் 4 பேருக்கு எதிராக வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இந்த போலி இந்திய கரன்சி நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

X