உஷார்... போலி கெஜ்ரிவால் உலவுகிறார்; பஞ்சாப் முதல்-மந்திரியை சாடிய கெஜ்ரிவால்

போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் என பஞ்சாப் முதல்-மந்திரியை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் சாடி பேசியுள்ளார்.
உஷார்... போலி கெஜ்ரிவால் உலவுகிறார்; பஞ்சாப் முதல்-மந்திரியை சாடிய கெஜ்ரிவால்
Published on

மொகா,

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் பணியை துவங்கி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால், ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படும் என கூறினார்.

இந்த நிலையில், மொகா நகரில் கெஜ்ரிவால் இன்று பேசும்போது, பஞ்சாபில் போலியான கெஜ்ரிவால் உலா வருகிறார் என்று பஞ்சாப் முதல்-மந்திரி சரீந்தர் சிங் சன்னியை சாடி பேசியுள்ளார்.

நாடு முழுவதற்கும் ஒரே ஒரு கெஜ்ரிவாலே உள்ளார். அவர் ஒருவராலேயே மின் கட்டணம் பூஜ்யம் அளவிற்கு கொண்டு வரமுடியும். அதனால் மக்கள் போலி கெஜ்ரிவால் பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com