

உடுப்பி,
கர்நாடக மாநிலம், உடுப்பி அருகே கொல்லூரில் பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மூகாம்பிகை கோவிலில் சேவா மற்றும் சண்டிகா ஹோமம் சிறப்பு பூஜைகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையம் கோவிலின் வளாகத்தில் செயல்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனிலும் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத விஷமிகள் கோவிலின் பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் கோவிலின் பல்வேறு பூஜை சடங்குகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கி பணம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அரவிந்த் சுதாகண்டி மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரியிடம் புகார் செய்தார். புகாரை ஏற்று கொண்டு போலி இணையதளத்தை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் அதிகாரி எச்சரித்து உள்ளார்.