இது ஏழைகளுக்கான அரசு; பணக்காரர்களுக்கான அரசு எனத் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

ஏழைகளுக்காகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது ஏழைகளுக்கான அரசு; பணக்காரர்களுக்கான அரசு எனத் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
Published on

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று உரையாற்றும் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம்

2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தோல்வியுற்று உள்ளது. ஏனெனில் ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணப் பரிமாற்றம் கூட வழங்கப்படவில்லை,ரேஷன்கள் தொடரப்படவில்லை.பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக, பணக்காரர்கள் வகுத்த பட்ஜெட் என கூறினார்.

இன்று மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சுயசார்பு இந்தியாவுக்கான பட்ஜெட் மற்றும் சிறப்பான பட்ஜெட் ஆகும்.ஏழைகள் நலனுக்காக மத்திய அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இது ஏழைகளுக்கான அரசு; பணக்காரர்களுக்கான அரசு எனத் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது

பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு திட்டங்கள் தீட்டுவதாக எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.

ஏழைகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உள்கட்டமைப்பை உருவாக்குதல், சீர்திருத்தத்தை தொடருதல் உள்ளிட்டவை பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்.பாதுகாப்பு துரைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கவில்லை.

ஏழைகளுக்காகவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.ஏழைகள், சிறுவணிகர்கள் உள்ளிட்டோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.

ஆகஸ்ட் 2016 முதல் ஜனவரி 2020 வரை யுபிஐ வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 3.6 லட்சம் கோடிக்கு மேல் நடைபெற்று உள்ளது. யுபிஐ யார் பயன்படுத்துகிறார்கள்? பணக்காரரா? இல்லை. நடுத்தர வர்க்கம், சிறு வணிகர்கள். அப்போது இந்த மக்கள் யார்? அரசாங்கம் யுபிஐ உருவாக்கி, பணக்கார நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறதா? இல்லை.

முத்ரா திட்டம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.27,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.100 நாள் வேலை திட்டத்தில் முரண்பாடுகள் களையப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் முறையாக பயன்படுத்தப்படுகிறது.இதுவரை இல்லாத அளவு 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 90,460 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடுகள் அதிகம். பணக்காரர்களுக்கு ஆதரவான அரசு என்றால் ஊரக சாலைகளுக்கு பணம் செலவிடப்படுமா ?.பாதுகாப்புத்துறையின் ஒவ்வொரு தேவைக்கும் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு விவசாயிகளின் பட்டியலை தராததால் உதவித் தொகை சென்றடையாமல் உள்ளது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com