

மும்பை,
பொதுத்துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி ஒருவர் பெற்ற கடைசி சம்பளத்தில் 30 சதவீதத்தினை குடும்ப ஓய்வூதியமாக குடும்பத்தினர் பெற முடியும். வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு முதலாளிகளின் பங்களிப்பு தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கிறது.
இதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல்களை நிதிச்சேவைகள் துறை செயலாளர் தேபசிங் பாண்டா, மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நேற்று வெளியிட்டார். குடும்ப ஓய்வூதிய உயர்வு, வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை கால பரிசாக வருகிறது.