திருட போன இடத்தில் போதையில் தூங்கிய நபர்: கையும் களவுமாக பிடித்த போலீஸ்

காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பரிதாபாத்,

அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ரவி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இரவு தனது ஈகோ மாடல் காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்த நிலையில் காலையில் காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர், காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். காரைத் திருட வந்த அந்த நபர் போதையில் உள்ளே உறங்கிவிட்டதாகவும் அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com