ராட்சத பாறை உருண்டு விழுந்து விவசாயி பலி

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே கட்டப்பனை நகராட்சிக்கு உட்பட்ட வல்லக்கடவு மலையடிவாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அப்பகுதியில் ஏலக்காய் தோட்டம் உள்ளது.
ராட்சத பாறை உருண்டு விழுந்து விவசாயி பலி.
Published on: 

குமுளி,

கேரளம் மாநிலம் குமுளியில் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் விவசாயி பலியானார்.

விவசாயி

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே கட்டப்பனை நகராட்சிக்கு உட்பட்ட வல்லக்கடவு மலையடிவாரப் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன் என்ற பென்னி (வயது 59), விவசாயி. இவருக்கு அப்பகுதியில் ஏலக்காய் தோட்டம் உள்ளது.

ராட்சத பாறை உருண்டு விழுந்து பலி

நேற்று இவர், தனது மனைவி ஜெஸ்ஸியுடன் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தின் அருகே உள்ள மலையில் இருந்து திடீரென ராட்சத பாறை ஒன்று உருண்டு பென்னி மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X