ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

கணவன்,மனைவி 2 பேரும் சேர்ந்து நிலத்தை ஏர்கலப்பையால் உழுத சோக சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா
Published on

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.

மேலும் டிராக்டர் உழவு எந்திரத்தை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு கூட அவர்களிடம் பணம் இல்லை. இதனால் கணவன்,மனைவி 2 பேரும் சேர்ந்து நிலத்தை ஏர்கலப்பையால் உழுத சோக சம்பவம் நடந்துள்ளது. அதாவது மனைவி கைகளில் கயிற்றை கட்டி இழுக்க ஏர் கலப்பையை திப்பண்ணா அழுத்தி பிடித்து நிலத்தை உழுதுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை. வயிற்று பிழைப்புக்கு விவசாயம் செய்கிறோம். அரசு எங்க ளுக்கு உதவ வேண்டும் என்று கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com