

அவர்கள் ஊட்டி-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். டாக்டர் சுவாமிநாதன் குழுவின் அறிக்கையை அரசு அமல்படுத்தி தங்களது மற்ற கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
இதேபோன்று மாண்டியா நகரில், கன்னட ஆதரவு அமைப்பினர் தமிழகத்திற்கு நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்களுக்கு நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.