சிறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்


சிறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
x

கவுதம் புத்த நகர் மாவட்ட சிறை

உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தில் 10 சதவீத மனை ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரேட்டர் நொய்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு கவுதம் புத்த நகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட விவசாயிகள் சிறையில் உணவு சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதுபற்றி விவசாய சங்கமான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கவுதம் புத்த நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் உரிமைகள் மற்றும் நலனுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உண்ணாவிரத போராட்டம் அமைதி வழி போராட்டமாக இருந்தாலும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய-மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

1 More update

Next Story