விவசாயிகள் ரெயில் மறியல்: வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடும் பாதிப்பு

மத்திய மந்திரி பதவிவிலகக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியதால், பல வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் ரெயில் மறியல்: வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
Published on

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். மோதிய கார்களில் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான், அரியானா, உள்ளிட்ட பல வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காலை 10 மணி தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றதால், வட மாநிலங்களில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏழு ரெயில்வே மண்டலங்களில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், விவசாயிகள் 184 இடங்களில் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் 160 ரெயில்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டன. மேலும் 63 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதுடன், 43 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com