

இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், நாட்டு நலனுக்காகத்தான் அன்னதான பிரபுக்கள் (விவசாயிகள்) அமைதியான வழியில் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் மக்களுக்கும், நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தருவோம் என கூறி உள்ளார்.