நாடாளுமன்ற பேரணி ஒத்திவைப்பு- விவசாய சங்கம் அறிவிப்பு

வரும் 30 ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாடாளுமன்ற பேரணி ஒத்திவைப்பு- விவசாய சங்கம் அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வந்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் குடியரசு தினமான நேற்று முன்தினம் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் போலீஸ் தரப்பில் சுமார் 300 பேர் காயம் அடைந்தனர். விவசாயி ஒருவரும் உயிரிழந்தார். 2 மாதங்களாக அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வரும் 1 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போராட்டம் ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கு பதிலாக வரும் 30 ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com