

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நேற்று முன்தினம் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடத்தினர்.
மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாநிலத்திலும், நாடு முழுவதிலும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற இந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள், அவர்கள் அச்சமற்றவர்கள், இங்கே இருக்கிறார்கள். இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.