பணமோசடி வழக்கு : பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

அமலாக்கத்துறை பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பணமோசடி வழக்கு : பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா. இவர் 2001 முதல் 2011 வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் 112 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அமலாக்க இயக்குனரகத்தின் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடைசியாக இந்த வழக்கில் பரூக் அப்துல்லா கடந்த மே மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com