மதுபோதையில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கிய கூலித்தொழிலாளி கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபோதையில் 4 வயது மகளை கொடூரமாக தாக்கிய கூலித்தொழிலாளி கைது
Published on

சண்டிகர்,

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிஜேந்திரா அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இருவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் சுரபி என்ற மகள் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான ஜிஜேந்திரா அவ்வப்போது குடித்துவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

கைது

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு மதுபோதையில் இருந்த ஜிஜேந்திரா தெருவில் நின்றுகொண்டிருந்த தனது மகள் சுரபியை கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜிஜேந்திராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com