தந்தை வாங்கி வந்த மதுபானம்; ஆசை தீர குடித்த மகன் - அடுத்து நடந்த கொடூரம்

திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
தந்தை வாங்கி வந்த மதுபானம்; ஆசை தீர குடித்த மகன் - அடுத்து நடந்த கொடூரம்
Published on

புனே,

மராட்டியத்தின் அமராவதி நகரில் வசித்து வருபவர் ஹீராமன் துர்வே (வயது 65). இவர் குடிப்பதற்காக மதுபானம் வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார்.

இதனை, இவருடைய மகனான திலீப் துர்வே (வயது 35) எடுத்து குடித்து உள்ளார். ஹீராமன் திரும்பி வந்து பார்த்தபோது, மதுபான பாட்டில் காலியாக இருந்துள்ளது. அதனை குடித்தது அவருடைய மகன் திலீப் என அறிந்ததும், ஆத்திரமடைந்து உள்ளார். அவரிடம் இதுபற்றி கேட்டுள்ளார். இதனால், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, ஹீராமன் மரத்தின் தடி ஒன்றை எடுத்து வந்து திலீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் குடிபோதையில் இருந்த திலீப் பலத்த காயமடைந்து உள்ளார். அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் பற்றி திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். கொலை வழக்கு ஒன்றும் பதிவாகி உள்ளது.

எந்த வேலையும் இன்றி சுற்றி திரிந்து வந்த திலீப், மதுவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் திலீப்பின் தந்தையை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com