அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

மும்பை ஒர்லியை சேர்ந்த பிங்கி மாலி, கடந்த 5 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார்.
அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்
Published on

மும்பை

துணை முதல்-மந்திரி அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்தவர் மும்பையை சேர்ந்த பிங்கி மாலி. விமான விபத்தில் சிக்கி பிங்கி மாலியும் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து பிங்கி மாலியின் தந்தை சிவகுமார் கண்ணீர் மல்க கூறுகையில், எனது மகளிடம் நேற்று (அதாவதுநேற்று முன்தினம்) இரவு இறுதியாக பேசினேன். அவள் எனக்கு போன் செய்து, ‘‘அப்பா, நான் அஜித்பவாருடன் பாராமதி செல்கிறேன். அவரை அங்கே இறக்கிவிட்டு நான் நாந்தெட் செல்வேன். ஓட்டலுக்கு சென்றதும் உங்களிடம் பேசுகிறேன்’’ என்று கூறினார்.

அதற்கு நான், ‘‘சரிம்மா, உன்னுடைய வேலை முடிந்ததும் நாளை பேசலாம்’’ என்று கூறினேன். ஆனால், அந்த நாளை ஒருபோதும் வரவில்லை என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

மும்பை ஒர்லியை சேர்ந்த பிங்கி மாலி, கடந்த 5 ஆண்டுகளாக விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். பிங்கி மாலியின் தந்தை சிவகுமார் மாலி, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நீண்டகால தொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com