மந்திரவாதி பேச்சை கேட்டு 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை

அரியானாவில் மந்திரவாதி ஒருவர் கூறியதன்பேரில் 5 வருடங்களில் தனது 5 குழந்தைகளை தந்தை ஒருவர் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மந்திரவாதி பேச்சை கேட்டு 5 வருடங்களில் 5 குழந்தைகளை கொன்ற தந்தை
Published on

சண்டிகர்,

அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா. இவர் கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 17ந்தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் எடுக்கப்பட்டது. கிராமத்திற்கு வெளியே இருந்து மற்றொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, தனது இரு மகள்களையும் கொலை செய்த விவரத்தினை ஒப்பு கொண்டுள்ளார். 5 வருடங்களுக்கு முன் தனது மூத்த மகனை கொலை செய்துள்ளார்.

இதேபோன்று, தனது மற்றொரு மகன் மற்றும் மகளையும் அவர் கொலை செய்துள்ளார். வறுமையால் இந்த கொலைகளை செய்தேன் என அவர் பஞ்சாயத்தில் கூறியுள்ளார்.

இதனால் கூடியிருந்த கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள். இதன்பின்பு போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஜும்மா கைது செய்யப்பட்டார். மந்திரவாதி ஒருவர் கூறியதன்பேரிலேயே இந்த கொலைகளை செய்தேன் என ஜும்மா கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com