

தொழில்நுட்பம் அடிப்படையிலான மோசடிகள் பெருகி வருவதால், அவற்றை தடுப்பதற்கான வழிகள், இரு நாடுகளிடையே வேகமான தகவல் பரிமாற்றம், ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை பற்றியும் விவாதித்தனர்.
தொலைபேசிவழி வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகள், இணைய அடிப்படையிலான நிதி மோசடிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது பற்றியும், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.