கேரளாவில் கல்லூரி மாணவர்களுடன் நடனம் ஆடி அசத்திய பெண் கலெக்டர்

கேரளாவில் கல்லூரி விழா ஒன்றில் மாணவர்களுடன் பெண் கலெக்டர் நடனம் ஆடியது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் கல்லூரி மாணவர்களுடன் நடனம் ஆடி அசத்திய பெண் கலெக்டர்
Published on

பத்தனம்திட்டா,

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ். ஐயர், எம்.ஜி. பல்கலை கழகத்தில் நடந்த இளைஞர் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், திடீரென அவர் மேடை மீது ஏறி பாடல் ஒன்றுக்கு மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். முன்பே பயிற்சி எதுவும் எடுக்காமல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஸ்டெப் போட்டு ஆடியது மாணவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது.

இதுபற்றி திவ்யா கூறும்போது, இந்த நடனம், எனது இளமைகால திருவிழா நாட்களுக்கு என்னை கொண்டு சென்றது. எனது பெற்றோர் மற்றும் மகன் ஆகியோரும் இங்கே உள்ளனர்.

எனது பெற்றோர் இருந்தது, என்னுடைய இளமைகால கல்லூரி திருவிழா நாட்களை எனக்கு நினைவுபடுத்தியது என்று அவர் கூறியுள்ளார். மாணவர்கள் அனைவரும் உற்சாகமுடன் ஆடினர். அதில் என்னை நான் இணைத்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் பலரும், கலெக்டரிடம், நடனம் ஆட ஏன் நீங்கள் தயங்கவில்லை என கேட்டனர். ஆனால், அதற்கு அவர், நான் தயங்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.

உண்மையில் இன்னும் நடனம் ஆட வேண்டும் என எனக்கு விருப்பம். இதனால் மகிழ்ச்சியடைந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com