கணவருக்கு நர்சுடன் கள்ளத்தொடர்பு... பஞ்சாப்பில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளத்தொடர்பு குறித்து கேட்டபோது பியூஷ் தனது மனைவி மீனாட்சியை கடுமையாக தாக்கியுள்ளார்.
கணவருக்கு நர்சுடன் கள்ளத்தொடர்பு... பஞ்சாப்பில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் மீனாட்சி. இவரது கணவரான டாக்டர் பியூஷ், ஜலந்தரில் கண் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மீனாட்சிக்கு சந்தேகம் எழுந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது, நர்ஸ் ஒருவருடன் பியூஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததை மீனாட்சி கண்டுபிடித்துள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டபோது, பியூஷ் தனது மனைவி மீனாட்சியை கடுமையாக தாக்கியுள்ளார். தனது கணவரின் நடத்தை பிடிக்காததால் அவரிடம் இருந்து பிரிந்த மீனாட்சி, கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் அவர் விவாகரத்து கேட்கவும் முயற்சி செய்துள்ளார். ஆனால் பியூஷ் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், மீனாட்சி சமீபத்தில் வீடு வாங்குவதற்காக வங்கியில் கடன் பெறுவதற்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் தனது பெயரில் ஏற்கனவே ரூ.2.5 கோடி அளவிற்கு கடன் பெறப்பட்டுள்ளதாக மீனாட்சிக்கு தெரியவந்தது. பியூஷ் புதிய கார் வாங்குவதற்காகவும், தனது மருத்துவமனைக்காகவும் மீனாட்சிக்கு தெரியாமல் அவரது பெயரில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண் டாக்டர் மீனாட்சி தனது வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மீனாட்சியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். பியூஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com