பெங்களூருவில் தோழி வீட்டு விருந்து நிகழ்ச்சியில் பெண் டி.எஸ்.பி தற்கொலை: 4 பேர் கைது

பெங்களூருவில் தோழி வீட்டிற்கு விருந்துக்கு வந்த பெண் டி.எஸ்.பி தற்கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் தோழி வீட்டு விருந்து நிகழ்ச்சியில் பெண் டி.எஸ்.பி தற்கொலை: 4 பேர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அன்னபூர்ணேஷ்வரி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்கு, குற்ற புலனாய்வு துறையில் டி.எஸ்.பி.யாக உள்ள லட்சுமி என்பவர் நேற்றிரவு விருந்துக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் லட்சுமிக்கு திருமணம் நடந்துள்ளது.

இதற்கு முன்பும் மனஅழுத்தத்தினால் லட்சுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அவரது தோழிகள் கூறியுள்ளனர். நேற்றிரவு அவரது தோழி வீட்டில் விருந்துக்கு சென்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

இதுபற்றி கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை இன்று ஹாவேரி நகரில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பெண் டி.எஸ்.பி.யின் பின்னணி உள்பட இந்த வழக்கு பற்றி முழுமையாக விசாரணை செய்யப்படும். அடிப்படையில் நடந்த தவறு என்ன என்பது பற்றி விசாரிக்கப்படும்.

இந்த வழக்கை விசாரணை மேற்கொள்ளும்படி உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். போலீசாருக்கு ஏதேனும் தனிப்பட்ட சிக்கல்கள் இருக்குமென்றால் அவர்களுக்கு உதவ மற்றும் ஆதரவு கரம் நீட்ட என்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

போலீஸ் படையினருக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அவற்றை விரைவில் பெரிய அளவில் செயல்படுத்துவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com