பெண் மர்மசாவு; கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை

படுபித்ரி அருகே பெண் மர்மமாக உயிரிழந்தார். இதுகுறித்து கணவர் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் மர்மசாவு; கணவர் குடும்பத்தினரிடம் விசாரணை
Published on

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் படுபித்ரி டவுன் பகுதியை சேர்ந்தவர் எதின் ராஜ் (வயது 32). இவரும் அதே பகுதியை சேர்ந்த வித்யா (29) என்பவரும் காதலித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் எதின்ராஜின் குடும்பத்தினர் வித்யாவை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் வித்யா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி வித்யா வீட்டில் உள்ள அறையில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அப்போது வித்யா விஷம் குடித்ததாக அவர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வித்யா பரிதாபமாக உயிரிழந்தார். குடும்ப தகராறில் வித்யா விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து படுபித்ரி போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் எதின்ராஜ் மற்றும் அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com