4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரிக்கு மனநல பரிசோதனை...

சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது.
4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரிக்கு மனநல பரிசோதனை...
Published on

பனாஜி,

கோவாவில் ஒரு ஓட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிறுவனர் சுசனா சேத்தை கடந்த டிசம்பர் 8-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் குழந்தையை தலையணை அல்லது துணியை வைத்து அழுத்தியதில் குழந்தை மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் பேசுவது சுசனா சேத்துக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. மேலும் அவர் கணவர் மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது கணவரை பழிவாங்க எண்ணி மகனை கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது தெரிவந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து, கோவாவில் சுசனா சேத் தங்கியிருந்த ஓட்டல் அறையை போலீசார் சோதனை மேற்கொண்ட போது இருமல் டானிக் பாட்டில்கள் காலியாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குழந்தைக்கு அதிக அளவில் மருந்தைக் கொடுத்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சுசனா சேத்தின் மனநிலையை மதிப்பிடுவதற்கும், கொடூரமான குற்றத்திற்கான காரணத்தைக் கண்டறியவும் உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

குழந்தையின் உடல் பெங்களூருவில் நேற்று அவரது தந்தை வெங்கடராமணால் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com