அரசு பஸ்களில் பெண் பயணிகள் மோதல்

கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்களில் ஏராளமான பெண் பயணிகள் பயணம் செய்தனர்.
அரசு பஸ்களில் பெண் பயணிகள் மோதல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக பெண்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் நேற்று துமகூரு மாவட்டம் பாவகடாவில் உள்ள கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்களில் ஏராளமான பெண் பயணிகள் படையெடுத்து சென்றனர். இதனால் பாவகடாவுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் பெண் பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பஸ்களில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com