மதம் - ஜாதிக்கு எதிராக போராடவில்லை, மோசடிக்கு எதிராக போராடுகிறேன்- நவாப் மாலிக்

மதம் - ஜாதிக்கு எதிராக நான் போராடவில்லை மோசடிக்கு எதிராக போராடுகிறேன் என சமீர் வான்கடே மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தி உள்ளார் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்.
மதம் - ஜாதிக்கு எதிராக போராடவில்லை, மோசடிக்கு எதிராக போராடுகிறேன்- நவாப் மாலிக்
Published on

மும்பை

மும்பை அருகே உல்லாச கப்பலில் போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாக்கி பேசி வருகிறார்.

மதம் - ஜாதிக்கு எதிராக நான் போராடவில்லை மோசடிக்கு எதிராக போராடுகிறேன் என சமீர் வான்கடே மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தி உள்ளார் மராட்டிய மந்திரி நவாப் மாலிக்.

இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்திரி நவாப் மாலிக் கூறியதாவது:-

போலி சான்றிதழின் மூலம் சமீர் வான்கடேபதவியில் இருக்கிறார். ஏழை ஒருவரின் உரிமைகளைப் பறித்துள்ளார். நான் மோசடிக்கு எதிராகப் போராடுகிறேன் மதம் அல்லது சாதிக்கு எதிராக அல்ல.

அருண் ஹல்தார் (எஸ்சிக்கான தேசிய ஆணையம், துணைத் தலைவர்) தனது பதவியின் கண்ணியத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நான் சமீர் வான்கடே மீது குற்றச்சாட்டுகளை எழுப்ப ஆரம்பித்தபோது, எனக்குத் தெரிந்தவர்கள் என்னை நிறுத்தச் சொன்னார்கள். ஷாருக்கான் தனது மகன் ஆரியன் கான் குறித்து பேசும்போது மாட்டிக்கொண்டதாகக் கூறப்படுவதாக அவர் சொன்னார். எனது வழக்கறிஞர் மகன் மற்ற வழக்கறிஞர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டார்.

போதைப்பொருள் சம்பந்தமான விஷயங்களில் பணம், குண்டர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர். உங்கள் உயிரை இழக்க நேரிடும் என சிலர் கூறினர்.என்னை பேசாமல் இருக்க செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால் இதனை ஒரு விசாரணைக்கு எடுத்துச் செல்வோம் என கூறியிருந்தேன். யாராவது நவாப் மாலிக்கைக் கொல்வார்கள் என்று சொன்னால், அவருக்கு வேண்டிய அந்த நாளில் மரணமடைகிறேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com