

புதுடெல்லி,
வாக்காளர் பட்டியலை முறைப்படுத்துவதற்காக பீகார். தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. இதில் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இது தலைமை தேர் தல் கமிஷனர் ஞானேஷ்குமாரின் முறைகேடான பணி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி அவரை பதவி விலக வலியுறுத்தி வருகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் முறைகேடுகள் செய்ததாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மக்க ளவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற் றும் எதிர்க்கட்சி தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்காக கடந்த 12-ந் தேதி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு பேரணியாக சென்றனர்.
இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெற முடியாத இளவரசர், ஒருநாள் பேரரசராக வேண்டும் என்ற ஆசையில் அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து ஸ்மிருதி இரானி கூறியதாவது:-
தேர்தல் மூலம் மட்டுமே ஜனநாயக நாட்டில் ஆட்சியை மாற்ற முடியும், போராட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிப்பது சரியல்ல. நாட்டில் உள்ள 90 கோடி வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் சரிபார்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் சுமார் 20 லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வது அவசியம். தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டுபவர்கள் அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.