’பா.ஜனதா, துச்சாதனன் கட்சி’ மம்தா பானர்ஜி ஆவேசம்

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மம்தா பானர்ஜி ஆவேசமாக சாடினார்
’பா.ஜனதா, துச்சாதனன் கட்சி’ மம்தா பானர்ஜி ஆவேசம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்து அமல்படுத்த முயற்சிப்பதாக பாரதீய ஜனதா கட்சி மீது மம்தா பானர்ஜி நேற்று ஆவேசமாக சாடினார்.

ரானாகாட் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், நாம் பாரதீய ஜனதா கட்சி போன்று துச்சாதனன் கட்சி அல்ல. அது மட்டுமல்ல, அவர்கள் முகமது பின் துக்ளக்கின் சந்ததியினரும்கூட. என்னிடம் என் அம்மாவின் பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் என்னை நாட்டில் இருந்து பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தூக்கி வீசி விடுமா? என்று கேட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com