திரைப்பட இயக்குனர் வி.ஆர்.பாஸ்கர் மரணம்

மறைந்த நடிகர் விஷ்ணுவர்தனின் உதவியாளர் கன்னட திரையுலகின் பிரபல திரைப்பட இயக்குனர் வி.ஆர்.பாஸ்கர் மரணம் அடைந்துள்ளா.
திரைப்பட இயக்குனர் வி.ஆர்.பாஸ்கர் மரணம்
Published on

மைசூரு

கன்னட திரையுலகின் பிரபல இயக்குனராக இருந்தவர் வி.ஆர்.பாஸ்கர். இவர் மறைந்த நடிகர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக இருந்ததுடன் அவரது நண்பராக பழகி வந்தார்.

அவரது நட்பால் திரைப்பட இயக்குனராக மாறிய வி.ஆர்.பாஸ்கர் நடிகர் விஷ்ணுவர்தனின் ருத்ரநாகா, கடமை, ருத்ர வீணை, தாதா, வழிபாடு, சுப்ரபாதா, ருத்ரா, சிங்கம் கஜபதிராவ், அப்ரமித்ரா உள்பட பல படங்களில் வசனகர்த்தாவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் அனுராகா தேவதா, மனேமனே ராமாயணம், சகலகலாவல்லபா, ஹிருதாஞ்சலி, பஞ்சாபி ஹவுஸ் ஆகிய படங்களையும் வி.ஆர்.பாஸ்கர் இயக்கியுள்ளார்.

இவர் தனது குடும்பத்தினருடன் மைசூருவில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகன், மனைவியை இழந்த வி.ஆர்.பாஸ்கர் பின்னர் மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல் மைசூரு அருகே சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. வி.ஆர்.பாஸ்கரின் மறைவுக்கு கன்னட திரையுலகினர், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com