மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்

நிதி மசோதா தற்போது மாநிலங்களவையின் விவாதத்தில் உள்ளது.
மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
Published on

2026-27-ம் நிதியாண்டுக்கான நிதி மசோதா மீது மக்களவையில் விவாதம் நடந்தது. இதில் அரசின் 32 திருத்தங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டன. பின்னர் அந்த திருத்தங்களுடன் இந்த மசோதா நிறைவேறியது.

இதன் மூலம் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைமுறைகள் அனைத்தும் மக்களவையில் நிறைவடைந்தன. இந்த மசோதா தற்போது மாநிலங்களவையின் விவாதத்தில் உள்ளது. அங்கும் நிறைவேற்றப்பட்டால் பட்ஜெட் நடைமுறைகள் முழுமையாக நிறைவடையும்.

மத்திய பட்ஜெட்டின் படி அடுத்த நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.53.47 லட்சம் கோடியாக இருக்கும். இது வருகிற 31-ந்தேதியுடன் முடிவடையும் நிதியாண்டு செலவி னத்தை விட 7.7 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் அடுத்த நிதியாண்டுக்கான மூலதன செலவினம் ரூ.12.2 லட்சம் கோடியாகவும், நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப் பிடப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com