2020ம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2020ம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2020ம் ஆண்டின் இரண்டாவது பகுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி

102 லட்சம் கோடி மதிப்பிலான இந்த தேசிய உட்கட்டமைப்பு திட்ட மையத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இது மாநிலங்கள் மற்றும் தனியார் துறையை உள்ளடக்கியது, இதன் பணி விரிவான திட்டமிடல், தகவல் பரப்புதல் மற்றும் என்ஐபி கட்டமைப்பை கண்காணித்தல் ஆகியவையாகும். பிரதமர் தனது சுதந்திர தின 2019 உரையில் அறிவித்ததற்கு இணங்க, அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்களை அடையாளம் காண இந்த பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

பின்னர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உட்கட்டமைப்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஏதுவாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான இந்த தேசிய உட்கட்டமைப்பு திட்டம் இந்தியாவை 2025-ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்க உதவி புரியும். அந்த குழு 70 விதமான துறை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சுமார் ரூ.102 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. அனைத்து சவால்களும் கண்டறியப்பட்டுவிட்டது, பயணிப்பதற்கான அனைத்து வழிகளும் தயாராக உள்ளது

2024-25ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும் . 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com