அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலை வெளியிட்ட நிதி அமைச்சகம்: குறைந்ததா? அதிகரித்ததா?

செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூலை வெளியிட்ட நிதி அமைச்சகம்: குறைந்ததா? அதிகரித்ததா?
Published on

புதுடெல்லி,

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதியன்று, முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இவ்வருடம் ஜிஎஸ்டி அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 22-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com