ராஜஸ்தான்: போலீஸ் கான்ஸ்டபிளை கன்னத்தில் அறைந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி மீது வழக்கு பதிவு

ராஜஸ்தானில் போலீஸ் கான்ஸ்டபிளை அறைந்ததாக பாஜக முன்னாள் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: போலீஸ் கான்ஸ்டபிளை கன்னத்தில் அறைந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி மீது வழக்கு பதிவு
Published on

ஜெய்ப்பூர்,

பாஜகவை சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் பரத்பூரில், பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்ததாகவும், போலீஸ் கான்ஸ்டபிளை அறைந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பரத்பூரில், அகத் திராஹே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீஸ் கான்ஸ்டபிள் கஜ்ராஜ் சிங் என்பவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இரவு 7 மணியளவில் காரில் வந்த பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவுர், தனது காரை நடுரோட்டில் நிறுத்தினார்.

"அந்த காருக்குள் கவுர் அமர்ந்திருந்தார். கான்ஸ்டபிள் கஜ்ராஜ் அவரது டிரைவரிடம் காரை மாற்ற சொல்லியும் கேட்கவில்லை. மாறாக கவுர் என்னை திட்ட ஆரம்பித்தார், சிறிது நேரம் கழித்து அவர் தனது காரில் இருந்து இறங்கி என்னை ஓங்கி அறைந்தார். அவருக்கு துணையாக டிரைவரும் வேறு சிலரும் இருந்தனர். அப்போது தலைமைக் கான்ஸ்டபிள் என்னுடன் பணியில் இருந்தார்" என்று போலீஸ் கான்ஸ்டபிள் கஜ்ராஜ் சிங் கூறினார்.

இதனையடுத்து கோட்வாலி காவல் நிலையத்தில் பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவுர் மீது அந்த போலீஸ் கான்ஸ்டபிள் புகார் அளித்தார். பணியில் இருந்த போலீசிடம் தவறாக நடந்து கொண்டதாக கவுர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, விரைவில் விசாரணை தொடங்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில் மீனா தெரிவித்தார். பாஜக முன்னாள் எம்பி கிருஷ்ணேந்திர கவுர் பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com