

மோதிஹரி,
பீகார் மாநிலத்தில் உள்ள ஷியோகர் தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், வேட்பாளருமான ரமாதேவி சாம்பரன் மாவட்டம் சாடவுனி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
அவரது அறையில் தேர்தல் அதிகாரிகளும், வருமான வரி அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் இல்லாமல் ரூ.4 லட்சத்து 9 ஆயிரம் இருந்தது. பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் ரமாதேவி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதுபற்றி ரமாதேவி கூறும்போது, இது எனது ஆதரவாளர்கள் எனக்கு கொடுத்த நன்கொடை. இதை நான் வைத்திருந்ததில் தவறு எதுவும் இல்லை என்றார்.