டெல்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து; 6 பேர் மாயம்

டெல்லியில் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காணாமல் போன 6 பேரை தேடும் பணி தொடருகிறது.
டெல்லியில் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து; 6 பேர் மாயம்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள உத்யோக் நகரில் காலணி தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென அந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து 31க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் 6 பேரை காணவில்லை.

இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறை இயக்குனர் அதுல் கார்க் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் தீவிர பணியில் போராடி வருகின்றனர். சம்பவ பகுதிக்கு நான் செல்கிறேன் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com