

காந்தி நகர்,
குஜராத் மாநிலம் பாலுத்ரா மாவட்டத்தில் புதிதாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் கூட்டாக இணைந்து இந்த ஆலையை அமைத்துள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க இருந்தார். திறப்பு விழாவுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் கச்சா எண்ணெய் வடிகால் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி நாளை திறக்கவிருந்த நிலையில் அங்கு தீ விபத்து நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.