மத்திய பிரதேசத்தின் புகழ் பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து

கோவிலில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ ஏற்பட்டது.
மத்திய பிரதேசத்தின் புகழ் பெற்ற மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
Published on

மத்திய பிரதேசம்,

மகாகாலேஸ்வரர் கோவில் இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் திடீரென தீ ஏற்பட்டது. இதனைக்கண்ட கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

இந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள பேட்டரி வெடித்து அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீ விபத்து பக்தர்கள் மற்றும் அங்குள்ள கடைக்காரர்கள் மத்தியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com