டெல்லியில் பாரதீய ஜனதா எம்.பி. வீட்டில் தீ விபத்து; குழந்தைகள் காயம்

புதுடெல்லியில் பாரதீய ஜனதா எம்.பி. ஒருவரது வீட்டில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
டெல்லியில் பாரதீய ஜனதா எம்.பி. வீட்டில் தீ விபத்து; குழந்தைகள் காயம்
Published on

புதுடெல்லி,

புதுடெல்லியில் பெரோஸ் ஷா சாலையில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. பி. ஸ்ரீராமுலுவின் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டின் படுக்கையறையில் உள்ள சோஃபா ஒன்று இன்று காலை 5.50 மணியளவில் தீப்பிடித்துள்ளது.

தகவல் அறிந்து உடனடியாக 2 தீயணைப்பு வாகனங்கள் அங்கு சென்றன. அதன்பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் எம்.பி.யின் குழந்தைகளுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com