

புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் லோதி சாலையில் உள்ள சிஜிஓ வளாகத்தில் சிபிஐ-யின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 1.40 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதற்கான தகவல் கிடைத்ததும் எட்டு தீ அணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.