குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சினில் தீ விபத்து


குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சினில் தீ விபத்து
x

புனலூர்- செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரட்டை எஞ்சின்கள் பொருந்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கொல்லம்,

கேரள மாநிலம், குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புனலூர்- செங்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே மலைப்பகுதி என்பதால் இரட்டை எஞ்சின்களை பொருத்துவதற்கான பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரெயில் எஞ்சினில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக சற்றும் தாமதிக்காமல் தீ அணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்து உள்ளனர். தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story