

சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா நகரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடம் ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.