

மும்பை,
இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜீரோ என்ற படத்தின் படப்பிடிப்பு மும்பை திரைப்பட நகரில் ஷெட் அமைத்து நடந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அந்த ஷெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நடிகர் ஷாருக்கான் ஷெட்டில் தான் இருந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஷெட்டில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
இருப்பினும் ஷெட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திரைப்பட நகரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.